Animal's Stunt Master Supreme Sundar praised Ajith | அஜித்தை பாராட்டிய அனிமல் படத்தின் சண்டைப் பயிற்சியாளர்

அஜித்தை பாராட்டிய அனிமல் படத்தின் சண்டைப் பயிற்சியாளர்


அஜித்தை பாராட்டிய அனிமல் படத்தின் சண்டைப் பயிற்சியாளர்
x

பில்லா மீண்டும் வந்துவிட்டார் என்று ‘குட் பேட் அக்லி’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் அஜித்தை பாராட்டியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்றது. அங்கு ஒரு சில முக்கியமான சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் படக்குழு இந்தியா திரும்ப இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், பிரபல சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது: பில்லா திரும்ப வந்துவிட்டார். இந்தப் படத்தில் புதிய அஜித்தினை பார்க்கலாம். தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் இருக்கும்படி உருவாகி வருகிறது. படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லமாட்டேன். ஆனால், படம் வேற லெவலில் உருவாகிவருகிறது. பாருங்கள் என்றார்.

சுப்ரீம் சுந்தர் தள்ளுமாலா, அனிமல் படங்களுக்கு சண்டைப் பயிற்சி மேற்கொண்டு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்


Next Story