பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை அனன்யா பாண்டே


பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை அனன்யா பாண்டே
x
தினத்தந்தி 12 Jan 2025 12:09 PM IST (Updated: 12 Jan 2025 12:19 PM IST)
t-max-icont-min-icon

நடிகை அனன்யா பாண்டே தனது தாயார் பாவனா பாண்டேவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

மும்பை,

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, சமீபத்தில் தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, 'சி.டி.ஆர்.எல்' என்ற படத்தில் நடித்தார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அனன்யா பாண்டே தனது தாயார் பாவனா பாண்டே மற்றும் சகோதரி ரைசாவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது.


Next Story