திரிவிக்ரமின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைகிறாரா அனிருத்?
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆணடு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அக்ஞாதவாசி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் கடந்த மாதம் 5-ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இப்படத்தையடுத்து அல்லு அர்ஜுன், திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் தயாரிப்பாளர் நாக வம்சி இதனை உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இது உண்மையாகும் பட்சத்தில் அல்லு அர்ஜுனுடன் அனிருத் இணையும் முதல் படமாக இது இருக்கும். அனிருத், திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆணடு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அக்ஞாதவாசி படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்கு இசையமைக்கும் பட்சத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரிவிக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைப்பார்.