அக்சய் குமார் நடிக்கும் 'பூத் பங்களா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கிறார்.
சென்னை,
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
மேலும், பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் 'பூத் பங்களா' படத்திலும் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் மூலம் அக்சய் குமார் 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார். கடைசியாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பூல் பூலையா படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக அக்சய் குமார் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்படுகிறது.