'அதிலிருந்து மீள எனக்கு ஒரு வருடம் ஆனது' - நடிகை அகன்ஷா ரஞ்சன்

Image Courtesy- Instagram@akansharanjankapoor
கோவிட் காரணமாக பல மாதங்களாக வீட்டிலேயே இருந்ததை அகன்ஷா நினைவு கூர்ந்தார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை அகன்ஷா ரஞ்சன், தான் பாலிவுட்டில் அறிமுகமான பிறகு எந்த வேலையும் இல்லாமல் போனதை நினைவு கூர்ந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ' கில்டி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அகன்ஷா ரஞ்சன். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பல பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும், அதன் பிறகு, கொரொனா தொற்றுநோய் நாடு முழுவதும் பரவியநிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிட் காரணமாக பல மாதங்களாக வீட்டிலேயே இருந்ததை அகன்ஷா நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், " 'கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி 'கில்டி'வெளியானது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த வேலையும் இல்லாமல் எட்டு மாதங்களுக்கு நான் வீட்டிலேயே இருந்தேன்.
அந்த ஆரம்ப நாட்களில், புதிய திட்டங்கள் மற்றும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் மற்றொரு படத்திற்கும் கூட எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் திடீரென்று, எல்லாம் அமைதியாகிவிட்டது. அதிலிருந்து மீள எனக்கு ஒரு வருடம் ஆனது," என்றார்.






