துபாய் கார் ரேஸிலிருந்து அஜித் விலகல்
துபாய் கார் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அஜித் ரேசிங் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய்,
அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மட்டும் ரேஸராக அஜித்குமார் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் அஜித்தின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் கார் பந்தயத்தில் 20 அணிகள் பங்குபெற்ற தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமாரின் அணி 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடைபெறும் கார் ரேஸில் ஒவ்வொரு அணியில் இருக்கும் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story