விமானத்தில் செல்போனை தொலைத்த பூஜா ஹெக்டே..வைரலாகும் வீடியோ


Actress Pooja Hegde loses her cell phone on a plane..video goes viral
x
தினத்தந்தி 22 March 2025 6:59 AM (Updated: 22 March 2025 7:41 AM)
t-max-icont-min-icon

விமானத்திற்குள் பூஜா ஹெக்டே செல்போனை தேடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.

இதனைத்தொடர்ந்து, விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்நிலையில், இவர் விமானத்திற்குள் செல்போனை தொலைத்து தேடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் வருண் தவான் அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட, செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என நடிகை பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.


Next Story