'காஞ்சனா 4' படத்தில் நடிகை பூஜா ஹெக்டே?


காஞ்சனா 4 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே?
x
தினத்தந்தி 11 Sept 2024 6:08 PM IST (Updated: 30 Dec 2024 5:34 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகை பூஜா ஹெக்டே 'காஞ்சனா 4' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் பேமிலி ஆடியன்சை கவர்ந்தது.

'சந்திரமுகி-2', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் 'காஞ்சனா 4' படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகின.

சமீபத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது 'காஞ்சனா 4' படத்திற்கான அப்டேட்டை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். அதாவது 'காஞ்சனா 4' படத்திற்கான கதை எழுதி முடித்துள்ளதாக கூறினார்.

இந்தநிலையில் தற்போது பிரபல நடிகை பூஜா ஹெக்டே 'காஞ்சனா 4' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே தற்போது ' தேவா', 'சங்கி' மற்றும் 'சூர்யா 44' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் படிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 'காஞ்சனா 4' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


Next Story