வருண் தவானுக்கு தமிழ் சொல்லி கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
அட்லியின் உதவி இயக்குனர் காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.