பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா


Actress Andrea had darshan at the Golden Temple
x

நடிகை ஆண்ட்ரியா அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

சென்னை,

பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது.


Next Story