நடிகை அமலாபால் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்


நடிகை அமலாபால் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
x

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு இலை என பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

நடிகை அமலாபால் நடித்த "லெவல் கிளாஸ்" என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, அவர் இன்னொரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது..


Next Story