கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,
சினிமாத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர், கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணியும் செய்து வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் கண்டார்.
இதற்கிடையில், அவர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா சார்ந்தும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அதன் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்ட பலர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






