கள்ளழகர் கோவிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்


கள்ளழகர் கோவிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 8 Dec 2024 2:44 PM IST (Updated: 8 Dec 2024 3:49 PM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த்தாக சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த நிலையில், அமரன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன், அவரது மனைவி ஆருத்ரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கள்ளழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் சிவகார்த்திகேயனுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.


Next Story