'மாஸ்க்' படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் கவின்


மாஸ்க் படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் கவின்
x

கவின் நடிக்கும் 'மாஸ்க்' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஸ்டார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்றது. இவர் அடுத்ததாக பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் 'பிளடி பெக்கர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நடிகர் கவின் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 'மாஸ்க்' படம் குறித்து பேசி உள்ளார். "மாஸ்க் படம் டார்க் காமெடிகள் நிறைந்த ஒரு ஆக்சன் திரில்லர் படமாகும். இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை எனக்கு சொன்னார். அவர் சில முக்கியமான காட்சிகளை பார்க்க மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் வருவார்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story