கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டிய துருவ் விக்ரம்


கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டிய துருவ் விக்ரம்
x
தினத்தந்தி 1 Nov 2025 4:32 PM IST (Updated: 1 Nov 2025 4:33 PM IST)
t-max-icont-min-icon

கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிசு வழங்கி நடிகர் துருவ் விக்ரம் பாராட்டியுள்ளார்.

சென்னை,

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ‘கில்லி’யாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை அலுவலகத்துக்கு அழைத்து துருவ் விக்ரம் பாராட்டி பரிசு வழங்கினார்.

‘பைசன்’ படக்குழு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இயக்குனர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story