'இரண்டாம் பாகம்' பற்றிய கேள்வி - நடிகர் ஆர்யா கொடுத்த பதில்


Actor Arya about Part 2
x
தினத்தந்தி 22 Dec 2024 7:44 AM IST (Updated: 22 Dec 2024 7:46 AM IST)
t-max-icont-min-icon

தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

சென்னை,

2005-ம் ஆண்டு வெளியான 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்து கலாபக் காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆர்யா, மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'சார்பட்டா பரம்பரை'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களின் 'இரண்டாம் பாகம்' பற்றிய கேள்விக்கு நடிகர் ஆர்யா பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'நல்ல விஷயம்தான். ஆனால், இரண்டாம் பாகத்தை வலுக்கட்டாயமாக எடுக்கக்கூடாது. முதல் பாகம் நன்றாக ஓடியது என்றால் இரண்டாம் பாகம் மக்களை எளிதாக சென்றடையும். அதையெல்லாம் தாண்டி படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் வரவேற்பார்கள். விமர்சனம் என்பது இயற்கையான ஒன்று. அதை பண்ணலாம் பண்ணக்கூடாது என்பதை நாம் சொல்ல முடியாது. விமர்சனத்தையும் தாண்டி நன்றாக இருந்தால் படம் ஓடும்' என்றார்.


Next Story