மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதி


Actor Ajith Kumar admitted to hospital
x
தினத்தந்தி 30 April 2025 2:08 PM IST (Updated: 30 April 2025 2:12 PM IST)
t-max-icont-min-icon

நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.

சென்னை,

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்ட நிலையில், அதற்கான பிசியோ சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story