திரைத்துறையில் 50 ஆண்டுகள்: ''கேப்டன் இருந்திருந்தால்...'' - ரஜினிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து


50 years in the film industry: If only there was a captain... - Premalatha Vijayakanth congratulates Rajinikanth
x

தமிழ் திரையுலகம் ஒன்றிணைந்து ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருகிறார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகம் ஒன்றிணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என அவர் தெரிவித்திருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார்.

கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.

திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story