30 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னத்தின் "பம்பாய்"


30 ஆண்டுகளை நிறைவு செய்த  மணிரத்னத்தின் பம்பாய்
x

மதங்களை கடந்து மனங்கள் ஒன்றிணைவதுதான் காதல் என்பதை கூறிய “பம்பாய்” வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவானது.

சென்னை,

மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான், ராஜீவ் மேனன் என மூன்று மாபெரும் கலைஞர்களின் கூட்டணியில் 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பம்பாய்'. அரவிந்தசாமி, சேகர் எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். பிறப்பால் இந்துவான சேகர், ஷைலா பானு எனும் இஸ்லாமிய பெண் மீது காதல் கொள்வார். சமூகத்தில் நிலவி வரும் மத வேற்றுமையை தாண்டி இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மதவாத பிரச்சினைகள், மதம் கடந்த காதலை தைரியமாக கையில் எடுத்து மணிரத்தினம் இயக்கிய இப்படம் இன்று வரை பார்வையாளர்களை அதிகமாக பாதித்தது. அரவிந்தசாமி, மனிஷா கொய்ராலா இருவரும் அவர்களின் காதலால் கண்களின் மூலம் உயிருக்குள் புகுந்து ஆர்ப்பரித்தனர்.


மும்பையை சூறையாடிய மதவெறியர்களின் உண்மையான கதைக்குள் அரசியலையும் அன்பையும் சரியான கலவையாக்கி 'பம்பாய்' என்ற கற்பனை கதையை மனதை உறைய வைக்கும் கட்சிகளோடு மதப்பிரிவுகளையும் கடந்து காதல் மனங்களை ஒன்றிணைக்கும் என்பதை படமாக்கி இன்று வரை அதை பேசவைக்கும் ஒரு படைப்பாக வழங்கி உள்ளார் மணிரத்னம்.



கண்ணாளனே, உயிரே, அந்த அரபிக் கடலோரம், குச்சி குச்சி ராக்கம்மா, பூவுக்கென்ன பூட்டு, மலரோடு மனம் இங்கு என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். மனதில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்திய 'பம்பாய்' திரைப்படம் மதத்தை கடந்து மனங்களை இணைய செய்வதுதான் காதல் என்பதை உரக்க சொல்லிய படைப்பு.

காதல் மனம் சார்ந்தது...மதம் சார்ந்ததல்ல.


Next Story