சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
x
Daily Thanthi 2024-08-01 05:47:54.0
t-max-icont-min-icon

சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம்: இறுதிகட்டத்தை எட்டியது

முண்டகை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முண்டகையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம் தயாராகி வந்தது.

இந்நிலையில் இரும்பு பாலம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் என்.டி.ஆர்.எப். மற்றும் முப்படைகளும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story