கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-12-09 05:09:41.0
t-max-icont-min-icon

கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்


தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், “சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது.

கீழ்பெண்ணாத்தூர் கிளிஞ்சல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை விரைவில் திறக்கப்படும் ” என்று அவர் கூறினார்.


Next Story