‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-08 21:44:18.0

‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக மாற்றினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.


Next Story