ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: எதிர்க்கட்சித்... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
x
Daily Thanthi 2024-12-14 09:06:56.0
t-max-icont-min-icon

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story