ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பா.ஜ.க. மாநில... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
x
Daily Thanthi 2024-12-14 08:45:59.0
t-max-icont-min-icon

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S.இளங்கோவன் அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று அதில் பதிவிட்டுள்ளார்.



Next Story