ஓபிஎஸ்-ன் பக்கம் தர்மம் உள்ளது என்ற வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது - மனோஜ் பாண்டியன்


ஓபிஎஸ்-ன் பக்கம் தர்மம் உள்ளது என்ற வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது - மனோஜ் பாண்டியன்
x
தினத்தந்தி 3 Feb 2023 5:27 PM IST (Updated: 3 Feb 2023 6:20 PM IST)
t-max-icont-min-icon

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பது தான் இந்த தீர்ப்பாக அமைந்துள்ளது என மனோஜ் பாண்டியன் கூறினார்.

சென்னை,

ஓபிஎஸ்-ன் பக்கம் தர்மம் உள்ளது என்ற வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கூறினார். இது தொடர்பாக மனோஜ் பாண்டியன் கூறியதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆரம்பத்தில் இருந்தே கழகத்தின் ஒற்றுமை அவசியம். இரட்டை இலையை பாதுகாக்க வேண்டும். கட்சியினர் ஒன்றாக செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு நான் எந்த வேட்பாளராக இருந்தாலும் ஒப்புதல் அளிக்க தயார் என தெரிவித்து வந்தார். அதனடிப்படையில் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலையை ஓ பன்னீர் செல்வம் நினைத்தபடி பாதுகாத்துள்ளார். அப்படி தான் இந்த நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவுக்காக மட்டும் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பது தான் இந்த தீர்ப்பாக அமைந்துள்ளது. அதேபோல் பொதுக்குழுவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக நீக்கப்பட்ட 4 பேரின் கருத்துகளையும் இந்த பொதுக்குழுவில் தெரிவிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தர்மம் ஓ பன்னீர் செல்வம் பக்கம் தான் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இன்றைய நிலையில் அதிமுக என்றால் ஒன்று ஓ பன்னீர் செல்வம். இன்னொன்று எடப்பாடி பழனிச்சாமி. இதில் அதிமுக தரப்பு என்று எதுவும் இல்லை. ஓ பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்து போடுவதாக . அதனடிப்படையில் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்த நிலையில் அந்த அதிகாரத்தை நீதிமன்றம் அளிக்கவில்லை'' என்றார்.


Next Story