மேம்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5


மேம்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5
x


பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எக்ஸ் 5 மாடலில் (எக்ஸ் 5 40 ஐ மற்றும் எக்ஸ் 5 30 டி) இரண்டு வேரியன்ட்களில் மேம்படுத்தப்பட்ட காரை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வடிவில் முன்புற பம்பர், மெல்லிய வடிவத்தில் முகப்பு விளக்கு, பின்புற எல்.இ.டி விளக்கு, உள்புறத்தில் இன்போடெயின் மென்ட் சிஸ்டத்தின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கார் 6 சிலிண்டருடன் 3 லிட்டர் என்ஜினைக் கொண்டது. 8 ஆட்டோமேடிக் கியர்கள் மற்றும் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டீசலில் இயங்கும் மாடல் 286 ஹெச்.பி. திறனையும், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், பெட்ரோ லில் இயங்கும் மாடல் 381 ஹெச்.பி. திறனையும், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தக் கூடியது. இது 48 வோல்ட் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளதால் 12 ஹெச்.பி. திறனையும், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் தருகிறது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.98 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story