வார ராசிபலன் 08.12.2024 முதல் 14.12.2024 வரை


Weekly Rasi Palan - 08.12.2024 to 14.12.2024
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

சுறுசுறுப்பாக எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேஷராசியினர் இந்தவாரம் திட்டமிட்ட செயல்களில் தடை தாமதங்களை சந்திப்பார்கள்.குடும்ப அளவில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சேமிப்புகரையும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பார்கள். உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை பணியிடத்தில் சுமுகமானபோக்கு நிலவிவரும் .பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி உண்டு. மருத்துவசிகிச்சைபெறுபவர்கள் வேலைக்கு மருந்துகளை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பபெரியவர்கள் மற்றும் குருமார்களிடம் ஆசீர்வாதம் பெறுவது பல நன்மைகளை அளிக்கும்.

ரிஷபம்

பெற்ற அனுபவங்களை மனதிற்குள் புதைத்துவைத்து அதைவெற்றி பெறுவதற்கான உத்வேகமாக பயன்படுத்தும் ரிஷபராசியினருக்கு இந்தவாரம் தானதர்மங்கள் செய்யும் வாய்ப்பு உண்டு. குடும்பநிலையை பொறுத்தவரை உறவினர்களது கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத பல்வேறு செலவினங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்த நன்மைகளை பெற்றுமகிழ்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியிலும், இதர எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டி செயல்களிலும் சிறப்பாக செயல்படுவார்கள். உடல்நலனை பொறுத்தவரை அலைச்சல் காரணமாக உடல்சோர்வு, சளித்தொல்லை ஆகியவை ஏற்பட்டு விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு உங்களால் இயன்ற தான தர்மத்தை செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

நடை, உடை, பாவனைகளில் மிக நேர்த்தியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்தவாரம் எதிர்பார்த்த பொருளாதார வரவுஉண்டு. குடும்ப உறவினர்களிடையே சில மனகுழப்பங்கள் ஏற்பட்டுவிலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த பொருளாதார வரவு தடை தாமதங்களுக்கு பிறகு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேசவேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் தடைகளை சந்தித்தாலும் இதர திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். உடல்நலனை பொறுத்தவரை மருத்துவ சிகிச்சைபெறுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

கடகம்

மாற்று சிந்தனைகளை மனதில் கொண்டு தனிப்பட்ட முறையில் செயல்படும் கடகராசியினருக்கு இந்தவாரம் சமூக அளவில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பபொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை சுலபமாக சமாளிக்கும் அளவு தனவரவு உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்திலாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்காலபடிப்பு குறித்த வழிகாட்டுதல்களை பெறுவார்கள். உடல்நலனை பொறுத்தவரை நுரையீரல்பாதிப்பு, இருமல் ஆகியவை ஏற்பட்டு நீங்கும். இயன்றபோதெல்லாம் பசுமாட்டுக்கு வாழைப்பழம் மற்றும் அகத்திக்கீரைகொடுப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

காரிய வெற்றி என்ற ஒரே இலக்கை குறிவைத்து அதைநோக்கி ஒற்றை சிந்தனையாக செயல்படும் சிம்மராசியினர் இந்தவாரம் உற்றார் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பிஸியாக இருப்பார்கள். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து அவற்றை தீர்ப்பது குறித்து ஆலோசனைசெய்வர். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுடைய பணிகளில் வழக்கத்தைவிட கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுயபொறுப்பை உணர்ந்து அனைவரும் பாராட்டும் காரியங்களில் ஈடுபடுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை வெளியிடங்களில் நேரம்தவறி உண்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சீராகும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதால் பல நன்மைகள் ஏற்படும்.

கன்னி

மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூச்சசுபாவம் கொண்ட கன்னிராசியினருக்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக மனக் குழப்பம் ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை தனவரவில் எந்தவித தடைகளும் ஏற்படாது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்டகாலமாக செயல்படுத்த வேண்டும் இன்று மனதில் நினைத்த திட்டங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைப்பதன் மூலம் மன உளைச்சலை அடைவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். உடல் நலனை பொறுத்தவரை மன அழுத்தம் காரணமாக ஜீரணக் கோளாறு அல்லது பிரஷர் ஆகியவை ஏற்பட்டு குணமடையும். ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு ஆடை மற்றும் பொருட்கள் தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

துலாம்

திட்டமிடுவது ஒன்று செயல்படுத்துவது இன்னொன்று என்று இருந்தாலும் வெற்றிக்கனியை பறிக்கும் திறமை பெற்ற துலாம் ராசியினருக்கு இது மகிழ்ச்சிகரமானவாரம். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய மாற்றங்களை நோக்கி தங்களுடைய முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலனை பொறுத்தவரை பற்களில்பாதிப்பு, வயிற்றுக்கோளாறு ஆகியவை ஏற்பட்டு விலகும். உடல் ஊன முற்றவர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

மற்றவர்களுடைய ரகசியங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் மனநிலை கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்தவாரம் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்றவரவுகளும் உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில்விருத்தி செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றத்தை பெறுவதற்கான சூழல் அமைந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளாக இருந்தாலும் வழக்கத்தைவிட கவனமாக இருக்கவேண்டும். உடல்நலனைபொறுத்தவரை அடிவயிற்று பகுதிகளில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.திருக்கோவிலில் அன்னதானம் செய்வதன்மூலம் பலநன்மைகள் தேடிவரும்.

தனுசு

பேசும்போது அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் காரியத்தில் மிக சரியாக செயல்படும் தனுசு ராசியினருக்கு இந்தவாரம் மகிழ்ச்சி கரமாக இருக்கும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானம் நல்ல விதமாக இருக்கும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்துலாபம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வை பெறுவதற்குரிய காலம்கனிந்து உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த காலத்தில் செய்த பலநல்ல விஷயங்களின் பலனை அடைவார்கள் .உடல்நலனை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு ஆகியவை ஏற்பட்டு குணமடையும். ஆதரவற்ற முதியோர்களுக்கு வஸ்திர தானம் அல்லது காலணி தானம் செய்வதன் மூலம் நன்மைகள் நாடிவரும்.

மகரம்

பிறர் செய்த உதவியை என்றுமே மறக்காமல் அதை அவருக்கு திருப்பி செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மகரராசியில் இருக்கு இந்த வாரம் பல மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எப்படியோ வரவுகள் வந்து செலவுகளை சமாளிப்பீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் சற்று சிரமப்பட்டால் தொழிலில் புதிய பாதையை உருவாக்கி சிறப்பிடம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் மனதில் நம்பிக்கைகளோடு எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் கூடிய விரைவில் கையில் வந்து சேரும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்பொழுது இருந்தே திட்டமிட்டு படித்தால் நிச்சயம் சிறப்பிடம் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார்கள். உடல்நலனை பொறுத்தவரை மனஉளைச்சல் காரணமாக தலைவலி மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டுவிலகும். ஆதரவற்றோர் இல்லத்துக்கு இயன்றவரை ஏதேனும் உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் நாடிவரும்.

கும்பம்

துன்பங்கள் மனதை வருத்தும் நிலையிலும் முகத்தில் புன்னகையோடு இயல்பாக செயல்படும் கும்பராசியினர் இந்தவாரம் புதிய நற்செய்திகளை பெறுவார்கள். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழையகடன்கள் தீர்க்கப்பட்டு புதியகடன்கள் வந்துசேரும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபட்டு வரவேண்டும். உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தை சிறிது காலம் தள்ளிவைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அதன் மூலம் பாடங்களில் நல்லமதிப்பெண் பெறும் சூழல் உருவாகும். உடல்நலமே பொறுத்தவரை வயிற்றுவலி, தலைவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். ஏழைப்பெண்களுடைய திருமணத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் நாடிவரும்.

மீனம்

பல துன்பங்களை அனுபவித்தாலும் மனதில் உள்ள நம்பிக்கையை கைவிடாத இயல்பு கொண்ட மீனம் ராசிகளுக்கு இந்தவாரம் புதிய உற் சாகம் ஏற்படும்.குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பணவரவு நல்லவிதமாக இருக்கும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேல் அதிகாரிகள் ஆதரவை பெற்று உள்ளம் மகிழ்ச்சி அடைவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி நிர்வாகத்தின் பாராட்டை பெறுவார்கள். உடல்நலனை பொறுத்தவரை மனகுழப்பம் காரணமாக தலைவலியும், உடல்நடுக்கமும் ஏற்பட்டு குணமடையும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைதானம் அல்லது பொருள் உதவி செய்வதன் மூலம் நன்மைகள் தேடிவரும்.


Next Story