இன்றைய ராசிபலன் - 27.03.2025


இன்றைய ராசிபலன் - 27.03.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

2025 மார்ச் 27

குரோதி வருடம் குரோதி மாதம் 13ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை12.02 வரை அவிட்டம், இரவு 11.01 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று இரவு 09.23 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 10.30 to 11.30

ராகு காலம் பிற்பகல்: 1.30 to 3.00

எமகண்டம் காலை: 6.00 to 7.30

குளிகை காலை: 9.00 to 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 to 1.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 to 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: பூசம், ஆயில்யம்

ராசிபலன்:

மேஷம்

ஷேர் மூலமாக பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல் நலம் சீராகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்

காதலர்களுக்கு பொறுமை அவசியம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். தொழிலில் பழைய நிலை மாறி முன்னேற்றம் தென்படும். நிதானம் தேவை.குடும்பத்தலைவிகள் தங்கள் கணவரிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். இருந்தாலும் பயணத்தால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

கடகம்

பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். காரணம் தங்களுக்கு இன்று சந்திராஷ்டமம். ஆதலால், மிகவும் எச்சரிக்கையுடன் ஊழியர்களிடம் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளவும். கூடுமானவரை அமைதி காப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

பெரியவர்களை மதிப்பது நல்லது. காதலர்கள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீரகள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பெண்கள் தங்க நகை வாங்க ஆரம்பிப்பர். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

வயதானவர்கள் அவ்வப்போது கோபப்படுவார்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். மருத்துவரிடம அனுகுவது நல்லது. பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். பணவரவு அதிகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் ஆனந்தம் குடிகொள்ளும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று தங்கள் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். அது தங்களுக்கு நல்ல மாற்றத்தினை தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

காதல் கைகூடும். உங்கள் வேலையில் தங்கள் பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் தாங்கள் அதனை செவ்வனே முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

இருசக்கர வாகனத்தை இயக்கும் போது மிகவும் அதிவேகத்துடன் வாகனத்தை இயக்க வேண்டாம். உங்களுடன் இருக்கும் உங்கள் நண்பர்கள் தங்கள் நிலையினை உணர்ந்து தொந்தரவு செய்யாதிருப்பர், மாறாக உங்களுக்கு உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

தாங்கள் எதிர்பார்த்த துணை தங்களுக்கு கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை


Next Story