இன்றைய ராசிபலன் - 19.03.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் பங்குனி 5-ம் தேதி புதன் கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை 06-56 வரை விசாகம் பின்பு அனுஷம்
திதி: இன்று இரவு 08-40 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை9-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மதியம் 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: ரேவதி, அஸ்வினி
மேஷம்
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது. உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்ஊதா
ரிஷபம்
இன்று வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இன்டர்யூவில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீன தொழில் நுட்ப கருவிகளை புதிதாக வாங்குவீர்கள். நினைத்த காரியம் வெற்றி பெறும். உடல் நலனில் கவனம் தேவை. வெளி வட்டாரங்களில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மிதுனம்
திருமணத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு தங்களின் மேலதிகாரிகள் தங்களுக்கு உதவிபுரிவர். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
கடகம்
எதிர்பார்த்த பணம் வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். திருமணமானவர்களுக்கு குழந்தைப்பேறுக்கான வழி கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். முதுகு, கை, கால் வலி வந்துப்போகும். பெற்றோரின் உடல் நிலையை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும. இல்லாவிட்டால மதிப்பெண் விசயத்தில் கோட்டை விடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். கர்ப்பினி பெண்கள் உடல் நிலையில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையற்ற மனக்கவலைகள் வந்து விடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
உறவினர்கள் தேடி வந்துப்பேசுவார்கள். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வரும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். திருமணமானபின் சில கடமைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். கசந்த காதல் இனிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
கணினி துறையைச்சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பெண்கள் செலவுகளை குறைத்துக்கொள்வர். காரணம் மற்ற முக்கியமான செலவுகள் காத்திருக்கும். தம்பதிகளின் வாழ்வில் இனிமை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
இன்று ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். மகம் நட்சத்திரகாரர்கள் தங்கள் சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இன்று அம்மனை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்