ஜனவரி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜனவரி மாத பலன்களை பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே..
எது நடந்தாலும் அதில் இருக்கும் நன்மையை மட்டும் சீர்தூக்கி பார்க்கும் பண்புடையவர். எல்லாம் நன்மைக்கென நினைக்கும் மனதிடம் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரிகளுக்கு திடீரென்று யோகம் கதவைத் தட்டும் நேரமிது. வேற்று இன மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் வியாபார நிமித்தமாக அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.
குடும்பத் தலைவிகள் தங்கள் சுய தொழில் மூலமாக தங்கள் வட்டாரத்தில் பிரபலமாவீர்கள். நல்ல வருவாயை எதிர்கொள்வீர்கள். கணவர் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.
கலைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த வங்கி டெபாசிட்களை கொண்டு தங்கள் காலியிடத்தில் வீடு கட்டத் துவங்குவீர்கள்.
மாணவர்கள் நினைத்த துறையை தேர்ந்தெடுப்பர். அதில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்
துர்க்கை அம்மனை ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே..
நீங்கள் மற்றவர்களின் மத்தியில் முதலிடத்தில் இருப்பதைவிட அதில் நமக்கு முக்கியத்துவம் இருந்தால் போதும் என்ற கொள்கையுடையவர்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும்.
வியாபாரிகளுக்கு திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.
குடும்பத் தலைவிகளைப் பொருத்தவரை கணவனுடன் இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.
கலைஞர்களுக்கு வி.ஐ.பி.களால் பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியங்கள் நிகழும்.
மாணவர்களைப் பொருத்தவரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிக்கும்படி நல்ல மதிப்பெண்களை பெறுவதற்காக படிப்பில் கடுமையாக கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று வில்வ மாலையை அணிவித்து தரிசிப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே..
தனக்கு தீங்கே நடந்தாலும் அது உங்களை பாதிக்காத வண்ணம் மனதினை பக்குவப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உங்களிடம் அதிகம் உண்டு.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைப்பதுடன் ஊதியமும் அதிகம் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்களின் வியாபார விஷயத்தில் வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்கள் கைக்கு கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கலைஞர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது என்ற நிலை மாறி அதிகளவு பணம் வரும்.
மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.
பரிகாரம்
சனி பகவானுக்கு சனிக்கிழமை தோறும் எள்தீபம் ஏற்றுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே..
எதையும் தாங்கும் இதயத்தைத்தான் தாங்கள் கடவுளிடம் கேட்பீர்கள். பொறுமையின் சிகரம் என்று சொல்லும் அளவிற்கு இருப்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
வியாபாரிகள் செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.
குடும்பத் தலைவிகள் தங்கள் பிள்ளைகள் தங்களின் அன்பை புரிந்து கொண்டு பொறுப்புடன் நடப்பர். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
கலைஞர்களுக்கு நினைத்த காரியங்கள் நடந்தேறும். பெற்றோர் சம்மதம் பெற்று காதல் திருமணம் நடக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
மாணவர்கள் அரைகுறையாக படிப்பதை நிறுத்திவிட்டு நன்கு மனதில் பதியும் வண்ணம் படிப்பது தங்கள் எதிர்கால வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும்.
பரிகாரம்
துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் கிழமை அன்று எலுமிச்சம் பழ விளக்கினை ஏற்றுவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389