ஜனவரி மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


January month rasipalan in tamil
x

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜனவரி மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே..

பெரியவர்களை போற்றுபவர் நீங்கள். அவர்களின் அனுபவ அறிவு நமக்குத் தேவை என கருதுபவர். அவர்களை உதாசீனம் செய்யாதவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். சம்பள உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.

குடும்பத்தலைவிகள் மற்றும் பெண்களுக்கு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற குழந்தை பாக்யம் கிடைக்கும். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு புதுப்பட வாய்ப்புகள் தங்கள் வாயிற் கதவை தட்டும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் நன்கு படிப்பர். அதிக மதிப்பெண்களை பெற பல முறை படிப்பது நல்லது. விளையாட்டை தவிர்க்கவும்.

பரிகாரம்

அம்மனுக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே..

எதுவும் நிரந்தரம் இல்லை என்பது உங்களுக்கு புரிந்த ஒன்று. வாழ்க்கையில் இதுவும் கடந்துபோகும் என்பதை நினைவில் கொண்டு வாழ்பவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை, வீட்டு கட்டுமானப் பணி செய்துகொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். அதனை தங்களது சம்பளத்திலேயே சரிகட்டப்பார்ப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் செழித்தோங்கும். மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். உணவில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.

கலைஞர்கள் சினிமா சம்பந்தப்பட்ட விசயத்திற்காக திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருக்கவேண்டியது அவசியம்.

மேற்படிப்பிற்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு அரசின் கல்விக்கடன் கிடைக்கும். பட்டயப்படிப்பில் உள்ள மாணவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.

பரிகாரம்

பிரத்தியங்கிரா காளிக்கு அரளிப்பூ பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே..

இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையும் மனம் உங்களின் தனிப்பண்பு. பேராசை பெரும் நஷ்டம் என்பதை உணர்ந்தவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு முயற்சி செய்யும் இட மாற்றம் மற்றும் சம்பள உயர்வுக்கான காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும்.

வியாபாரிகளின் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். மொத்தத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

கலைஞர்களுக்கு விருதுகள் கிடைக்கும் மாதமாக அமையும். வெளி நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு வகுப்பறையில் அரட்டை அடிப்பதை தவிர்ப்பது நல்லது. பாடம் நடத்தும் போது முழுகவனம் அவசியம்.

பரிகாரம்

அம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே..

எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடிப்பவர் நீங்கள். கோபத்தை குறைத்து விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சீக்கிரம் வந்து சேராது. ஆதலால் கடன் கொடுக்கும் முன் யோசித்து முடிவு எடுங்கள்.

வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். மாத மத்தியில் அனைத்தும் சரியாகும்.

குடும்பத் தலைவிகளுக்கு அக்கம்-பக்கத்து வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.

கலைஞர்களுக்கு காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். முதலில் தங்கள் கடமையை செய்த பின்பு நிதானமாக யோசிப்பது நல்லது..

மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அதன்படி படிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்கள். நல்ல மதிப்பெண்களும் பெறுவர்.

பரிகாரம்

காஞ்சி காமாட்சியை நினைத்து வீட்டில் வெள்ளிக் கிழமை அன்று விளக்கேற்றுவது நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story