எஸ்.ஏ.20 ஓவர் லீக்; பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய எம்.ஐ.கேப்டவுன்
எம்.ஐ.கேப்டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட், ரஷித் கான், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.;
கேப்டவுன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ.கேப்டவுன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. எம்.ஐ.கேப்டவுன் தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 59 ரன் எடுத்தார். பார்ல் ராயல்ஸ் தரப்பில் தயான் கலீம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியினர் எம்.ஐ.கேப்டவுன் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக 33 ரன் வித்தியாசத்தில் எம்.ஐ. கேப்டவுன் அணி வெற்றி பெற்றது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 34 ரன்கள் எடுத்தார். எம்.ஐ.கேப்டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட், ரஷித் கான், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.