பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் களம் இறங்கும் டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட உள்ளார்.;
கராச்சி,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.ல் தொடர் போல பாகிஸ்தானில் பி.எஸ்.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்வரும் பி.எஸ்.எல். தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், முதல்முறையாக விளையாடுகிறார்.
வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சியில் அவரை கராச்சி கிங்ஸ் அணி எடுத்துள்ளது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோரும் இதே அணிக்காக ஆடுகிறார்கள். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.