3 வெள்ளை முடிந்துவிட்டது... இன்னும் ஒரு சிவப்பு மட்டுமே - விராட் கோலிக்கு டிராவிட் அறிவுரை

வெள்ளை பந்து போட்டிகளான ஒருநாள், டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை விராட் கோலி வென்றுவிட்டார்.

Update: 2024-07-01 07:29 GMT

image courtesy:AFP

பார்படாஸ்,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேறும் முன்னதாக வீரர்களின் ஓய்வறையில் டிராவிட் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இன்னும் ஒரு வேலை மீதம் இருப்பதாக சுட்டிக்காட்டி அதனையும் சாதித்து விட வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறும் வகையில் டிராவிட் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விராட் கோலியிடம் அவர் கூறியது பின்வருமாறு:- "மூன்று வெள்ளை பந்து கோப்பைகளையும் முடித்து விட்டீர்கள். இன்னும் ஒரு சிவப்பு மட்டுமே மீதம் உள்ளது அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதாவது வெள்ளை பந்துகளில் ஆடப்படும் 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று வகையான உலககோப்பையை வென்ற அணியிலும் விராட் கோலி இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இன்னும் சிவப்பு பந்தில் விளையாடும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மற்றும் அவர் கைப்பற்றவில்லை. அதனையும் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்