உலகிலேயே பரப்பளவில் சிறிய நாடுகளை பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

பிரபலமாக விளங்கும் நகரங்களை விட குறைந்த பரப்பளவை கொண்ட நாடுகளும் உள்ளன. அப்படிப்பட்ட சிறிய நாடுகள் சிலவற்றை பற்றியும், அந்த நாடுகளின் சுவாரசிய அம்சங்கள் பற்றியும் பார்ப்போம்.

Update: 2024-01-21 09:19 GMT

மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் யார் பெரிய நாடு என்ற போட்டி இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று இந்தியா முதலிடத்தை பிடித்துவிட்டது. இதற்கு எதிர்மாறாக வாடிகன் போன்ற மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக கொண்ட நாடுகள் உலகில் ஏராளம் இருக்கின்றன. பிரபலமாக விளங்கும் நகரங்களை விட குறைந்த பரப்பளவை கொண்ட நாடுகளும் உள்ளன. அப்படிப்பட்ட சிறிய நாடுகள் சிலவற்றை பற்றியும், அந்த நாடுகளின் சுவாரசிய அம்சங்கள் பற்றியும் பார்ப்போம்.

மொனாக்கோ

பரப்பளவு: 2.02 சதுர கி.மீ.

இடம்: மேற்கு ஐரோப்பா

மக்கள் தொகை: 39,511

மொனாக்கோ, வாடிகனுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது சிறிய நாடு. ஆனால், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கோடீஸ்வரர்கள் மற்றும் மில்லியனர்கள் அதிகம் பேர் வாழும் நாடாக விளங்குகிறது. இது மத்தியதரைக் கடலில் பிரெஞ்சு ரிவியரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மூன்று திசைகள் பிரான்ஸ் நாட்டை எல்லைகளாக கொண்டிருக்கின்றன. மற்றொரு திசை மத்திய தரைக்கடலை எல்லையாக கொண்டுள்ளது. இதன் பொருளாதாரம் சுற்றுலாவையும், சூதாட்டத்தையும் சார்ந்துள்ளது. இங்கு கேளிக்கை விடுதிகளும், சூதாட்ட கிளப்புகளும் ஏராளம் உள்ளன.

இங்கு வருடந்தோறும் நடைபெறும் பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் பிரபலமானது.


 



துவாலு

பரப்பளவு: 30 சதுர கி.மீ.

இடம்: ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு

மக்கள் தொகை: 11,931

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இது எல்லிஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசமாக இருந்த இந்த நாடு 1978-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

இதன் தலைநகரம் புனாபுடி. துவாலுவான், ஆங்கிலம் மற்றும் சமோவான் ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

லிச்சென்ஸ்டீன்

பரப்பளவு: 160 சதுர கி.மீ.

இடம்: சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே அமைந்துள்ளது.

மக்கள் தொகை: 38,250

ஆல்ப்ஸ் மலை பகுதியில் முழுமையாக அமைந்துள்ள உலகின் ஒரே நாடு இதுவாகும். இங்கு ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையம் இல்லை. இதன் அதிகாரப்பூர்வ மொழி ஜெர்மன்.

தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் உலகின் பணக்கார நாடாகவும், குறைந்த வேலையின்மை விகிதம் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.

நவ்ரு

பரப்பளவு: 20 சதுர கி.மீ.

அமைந்துள்ள இடம்: கிழக்கு ஆஸ்திரேலியா

மக்கள் தொகை: 10,876

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறிய தீவு நாடு இது. அதிகாரப்பூர்வ தலைநகரம் இல்லாத நாடாகவும் விளங்குகிறது. அமைதியான தீவாக அறியப்பட்டாலும் இங்கு வசிப்பவர்களில் 90 சதவீதம் பேர் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். உலகிலேயே உடல் பருமன் உள்ளவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடும் இதுதான். அத்துடன் டைப்- 2 நீரிழிவு நோயின் தாயகமாகவும் இது அறியப்படுகிறது.

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

பரப்பளவு: 260 சதுர கி.மீ

இடம்: வட அமெரிக்கா

மக்கள் தொகை: 53,544

இதன் முழுப் பெயர் செயிண்ட் கிறிஸ்டோபர் மற்றும் நெவிஸ் கூட்டமைப்பு. இந்நாட்டின் தலைநகரம் பாசெட்டரே. ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்த முதல் தீவாக இந்நாடு அறியப்படுகிறது. 1983-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றது. சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு உற்பத்தித் தொழில்கள் இதன் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன. இந்நாட்டின் ஒரே அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்தான். ஆனால் கிரியோல் மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது.

 சான் மரினோ

பரப்பளவு: 60 சதுர கி.மீ.

இடம்: ஐரோப்பா

மக்கள் தொகை: 34,017

அமைதியான குடியரசு நாடாக அழைக்கப்படுகிறது. இந்த நாட்டின் எல்லைகள் இத்தாலியை சூழ்ந்திருக்கின்றன. உலகில் எஞ்சி யிருக்கும் மிகப் பழமையான இறையாண்மை குடியரசு நாடு இதுவாகும்.இந்த நாட்டின் தலைநகரம் சான் மரினோ நகரம்தான். தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் செல்வந்தர்கள் அதிகம் வாழும் தேசமாகவும் விளங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்