4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு

Update: 2024-05-13 00:00 GMT
Live Updates - Page 2
2024-05-13 04:05 GMT

ஜம்மு காஷ்மீரில் வாக்களித்த பிறகு முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்குமே வன்முறை இல்லை. அமைதி நிலவுகிறது என சொல்லிக்கொள்ளும் பாஜக அரசு, எங்கள் கட்சியினரை கடந்த 2 நாட்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளை வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பாஜக பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது’ என்று கூறினார். 

2024-05-13 03:34 GMT

ஆந்திரா; பல்நாடு மாவட்டத்தின் ரெண்டாலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

2024-05-13 02:56 GMT

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடப்பாவில் உள்ள புலிவேந்தலா வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:- கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ஆட்சியை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் பயன்பெற்றதாக நீங்கள் கருதினால், உங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஆட்சி நிர்வாகத்திற்காக வாக்களியுங்கள்” என்று கூறினார். 

2024-05-13 02:40 GMT


ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், கந்தேர்பல் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். 

2024-05-13 02:20 GMT

வாக்கு செலுத்தி கடமையை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி

96 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

”மக்களவை தேர்தலின் 4வது கட்டமாக இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தவறாது வாக்குகளை செலுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். வாருங்கள், அனைவரும் நமது கடமையைச் செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்.” 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

2024-05-13 01:56 GMT


தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது வாக்கினை பதிவு செய்தர். 

2024-05-13 01:49 GMT

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.அங்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அதேபோல் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடனும் கூட்டணி அமைத்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளும், 10 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்