நாடாளுமன்ற தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்திய 64.2 கோடி வாக்காளர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் 65.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
இதில் முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும், 2-வது கட்டத்தில் 66.71 சதவீதமும், 3-வது கட்டத்தில் 65.68 சதவீதமும், 4-வது கட்டத்தில் 69.16 சதவீதமும், 5-வது கட்டத்தில் 62.2 சதவீதமும், 6-வது கட்டத்தில் 63.37 சதவீதமும், 7-வது கட்டத்தில் 63.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இந்தநிலையில் இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 64.2 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். மொத்தம் 65.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 67.40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அப்போது 91.20 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2024-ம் ஆண்டு தேர்தலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 96.88 கோடியாக அதிகரித்ததுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.