மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-06 14:41 GMT

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் சங்லி மக்களவை தொகுதியில் விஷால் பட்டீல் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி வசந்த்தாதா பட்டீலின் பேரன் ஆவார். இவர் சங்லி தொகுதியில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் தாக்கரே) அணி வேட்பாளர் சந்திரஹர் சுபாஷ் பட்டீல், பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பட்டீல் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் விஷால் பட்டீல் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்லி தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷால் பட்டீலை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்