கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்

Update: 2024-10-27 03:55 GMT
Live Updates - Page 6
2024-10-27 04:48 GMT

தவெக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் காயம்

தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயிலில் சென்றவர்கள் மாநாட்டு பந்தலை பார்த்து பலர் ஆர்வமிகுதியில் கீழே குதித்து உள்ளனர். ரெயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்த நிதிஷ் குமார் (வயது 21) என்ற இளைஞர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக மாநாட்டிற்காக சென்ற இளைஞர் சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தவெக மாநாட்டிற்கு சென்றவர்களின் வாகனம் தாம்பரம் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024-10-27 04:28 GMT

அணிவகுக்கும் வாகனங்கள்...

தவெக மாநாடு நடைபெறும் வி.சாலையில் சுமார் 2 கி.மீ.,தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

2024-10-27 04:19 GMT

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024-10-27 04:17 GMT

விஜயின் கட்டளையை மீறிய தொண்டர்கள்

தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளது. விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையை தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

2024-10-27 04:14 GMT

50 சதவீதம் நிரம்பிய பார்க்கிங்

தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பிவிடும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதே சுமார் 1 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர்.

2024-10-27 04:09 GMT

மாநாட்டு திடலுக்கு விஜயின் தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகர் காலை 11:00 மணிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024-10-27 04:08 GMT

தவெக மாநாட்டில் செல்போன் சிக்னல் பாதிப்பு: தொண்டர்கள் தவிப்பு

தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் திடீரென செல்போன் சிக்னல் பாதிக்கப்பட்டதால் மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள், குடும்பத்தினருக்கு தகவல் அனுப்ப முடியாமல் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பிற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்