அமித்ஷா வருகையை கண்டித்து போராட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

Update: 2024-12-24 12:51 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும்.

ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்.என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்