கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி; மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் நமது எதிரிகள் என்று விஜய் கூறினார்.
விழுப்புரம்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். கூட்டணியில் இடம்பெறுவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்” என அவர் பேசினார். 45 நிமிடங்களுக்கும் மேல் விஜய் உரையாற்றினார்
விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை"-தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து ஹெச்.ராஜா கருத்து!
2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் எனக்கூறிய விஜய் நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்று அறிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனவும் விஜய் கூறினார்.
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் - விஜய்
அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? - விஜய்
பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் - விஜய்
அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான் - விஜய்
வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை
இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? - விஜய்
NO LOOKING BACK"
"Extra Luggage-ஆக நான் இங்கு
வரவில்லை. உங்களில் ஒருவனாக
இருந்து உழைப்பதே என் Target.
ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்"
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
என் மீது அவதூறு பரப்பினால் நான் பயப்படமாட்டேன்:என்னை வீழ்த்த முடியாது: விஜய்
*ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி
மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் நமது எதிரிகள்
-விஜய் பேச்சு
பச்சை தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றிக்கழகம் செயல்படும்: விஜய்