கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்.என தெரிவித்துள்ளார் .