இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

யாருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை'' மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க யாருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. காவிரி டெல்டா பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசு உரிமம் வழங்காததால் ஒ.என்.ஜி.சி நிறுவனம் திட்டத்தை கைவிட்டுள்ளது - மயிலாடுதுறை காங்., எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி எழுத்துப்பூர்வ பதில்
தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சித்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. எனவே திராவிடர் கழகம் அளித்த தந்தை பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன் என்று அறம் இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வரும் நிலையில், நாளை தனது கட்சியின் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
- சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம்
- சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி நியமனம்
- காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் நியமனம்
மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள் 2026ல் முடியும்.மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள் 2026ல் நிறைவு பெறும். மத்திய தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் அனைத்துதுறைகள், அமைச்சகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் -நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் - டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் - ஆட்சியர் இளம்பகவத்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்"
படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என் நோக்கம் தகராறு செய்வது இல்லை
அமைச்சர் சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார்
நான் பேச வந்ததை முழுமையாக கேட்காமல் பாதியில் நிறுத்திவிட்டார்கள் - வேல்முருகன்
பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை - அமைச்சர்
பால் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை
- சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன்
த.வெ.க பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.