ரம்ஜான் பண்டிகை: சென்னை - பெங்களூரு சிறப்பு ரெயில் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;

Update:2025-03-22 15:04 IST
ரம்ஜான் பண்டிகை: சென்னை - பெங்களூரு சிறப்பு ரெயில் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே

கோப்புப்படம்

ரம்ஜான் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரெயில்வே பெங்களூரு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது:

பெங்களூரு - சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 07319) மார்ச் 28, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 08.05 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 07320) மார்ச் 28, 2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 10.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 23.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்