திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் விடையாற்றி உற்சவம்
பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சிறப்பு படையல் செய்யப்பட்டது.;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய 81 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழா நிறைவு பெறும் வகையில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீப ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவைகள் மூலம் சிறப்பு படையல் செய்யப்பட்டு அம்மனுக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் முருகையன், தலைமை பூசாரி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.