எம தர்மனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அம்பிகை

மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான்.;

Update:2025-03-26 15:24 IST
எம தர்மனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அம்பிகை

மார்க்கண்டேயனின் உயிரைக் கவர எம தர்மன் சென்றபோது, அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறான். அப்போது எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீதும் விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை காலால் உதைத்து தண்டித்ததுடன், மார்க்கண்டேயனுக்கு 'எப்போதுமே பதினாறு வயதுதான்' என்றும் அருள்புரிந்தார்.

சிவபெருமான் இவ்வாறு கோபத்தில் காலனை காலால் உதைத்த சம்பவத்திற்கு பின்னால், ஒரு உட்பொருள் இருக்கிறது.

நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும் தவம் செய்தார், எமதர்மன். அப்போது அவர் முன்பாக தோன்றிய அம்பிகையிடம், "தாயே! தங்கள் திருவடி, என் மார்பின் மீது பட வேண்டும்" என்று வேண்டினார். "தக்க சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்" என்று அருளாசி கூறி மறைந்தாள் அம்பிகை.

மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஈசனின் இடப்பாகம் ஆதிபராசக்தி என்ற நிலையில், சிவனின் இடது கால் பகுதி அன்னையின் திருவடியாகவே பார்க்கப்படுகிறது. எனவே எமதர்மனின் விருப்பப்படி, அம்பிகையின் திருவடி அவரது மார்பில் பதிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்