கணக்க விநாயகர் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூஜை நிறைவு விழா
மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது.;

கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாள் மண்டல பூஜை நடத்துவது வழக்கம். அவ்வகையில் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக 48-ம் நாள் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது.
மாளிகைமேடு, உட்கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோவில், சம்போடை, பாகல்மேடு, சின்ன வளையம், புதுச்சாவடி, கடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இந்து சமய அறநிலைத்துறை பிரகதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.