ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை
கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது.;

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.04.2025 முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் கட்டடத் திட்ட ஒப்புதல் நிகழ்நிலை அமைப்பின் (Online Building Plan Approval System) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும். பொதுமக்களுக்காக இந்த சேவையை மேம்படுத்த வேண்டி இந்த கட்டிடத் திட்ட ஒப்புதல் நிகழ்நிலை தமிழ்நாடு ஒற்றைசாளர போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
01.04.2025 முதல் பெருநகர சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் (Tamil Nadu Single Window Portal for Planning Permission) இணையதளம் மூலம் தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், 31.03.2025 மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையிலேயே ஒப்புதல் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.04.2025 முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் (Tamil Nadu Single Window Portal for Planning Permission) இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.