இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

Update:2024-12-11 06:48 IST
Live Updates - Page 3
2024-12-11 03:41 GMT

இன்று தொடங்கும் கனமழை வரும்16-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்


ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை நோக்கி வரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


2024-12-11 02:48 GMT

பைக்-டாக்சி ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை?

வணிக நோக்கத்திற்காக (பைக்-டாக்சி) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை இன்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன விதியை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024-12-11 02:46 GMT

சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் - தனியார் வானிலை ஆய்வாளர்


தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலை தளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும்.

நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்;

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் காவிரி படுகை, கொடைக்கானல், குன்னூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு கொடைக்கானல், குன்னூர் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கலாம்

தென் தமிழகம் - மதுரை - தேனி, தென்காசி விருதுநகர் போன்ற பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி நெல்லை, குமரி தென்பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024-12-11 02:31 GMT

ராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


2024-12-11 02:12 GMT

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது. இதில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



2024-12-11 01:56 GMT

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கனமழை

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்