உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மராட்டிய மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது 1,440 ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சார்க்கப்பட்டன. அவற்றின் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்கு எண்ணிக்கையுடன் சரியாக பொருந்தியதாக மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிரண் குல்கர்னி தெரிவித்தார்.
வரும் நாட்களில் உக்ரைன் மீது ரஷியா மீண்டும் ஆபத்தான புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாகுபாடாக நடந்துகொண்ட விதம், அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கான நோட்டீஸ் கொடுக்க தூண்டியது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் விதிகளை விட அரசியலே முன்னுரிமை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டின.
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அங்கிருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர வேண்டும் என்றும் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
புயல்-வெள்ள நிவாரண நிதி: பொதுமக்கள் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புயல்-வெள்ள நிவாரண நிதி பொதுமக்களின் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக புயல்-வெள்ள நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5,000 நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்